
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறித்த மாவட்டங்களின் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் பல இதர மாவட்டங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.