
17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 'இ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி, 2027-ம் ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு முறை ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய மகளிர் தேசிய அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.