
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.
பொதுமக்களின் தேவைக்காக தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழக அரசு மூன்றாம் கட்டமாக கொள்முதல் செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பாகவோ அல்லது குறைகள் இருந்தாலோ 96005 61969 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.