
94 வயதான பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1931-ம் ஆண்டு பிறந்த இவர், 1950-களில் திரையுலகில் அறிமுகமாகி 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கலைத்துறையில் இவரது பங்களிப்பிற்காக 2022-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.