
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமராக தான் இருக்கும் வரை காசா அல்லது மேற்குக் கரையில் பாலஸ்தீன தனி நாடு அமைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு சவூதி அரேபியா, எகிப்து, துருக்கி உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.