
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் பல்கலைக்கழகத்தின் 80-வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தை வழங்கும் உன்னதமான படைப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
தாஷ்கன்ட் பல்கலைக்கழகம் அறிவின் பரந்த கடலில் மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு சிறந்த கல்வி நிறுவனம் என்று பிரதமர் மோடி தனது உரையில் பாராட்டினார்.