
ராஜபாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி தணிகாசலம் போதை கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 மாதங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாகக் கூறினாலும் குற்றங்கள் குறையவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் வசனம் பேசுவதை விடுத்து, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் போதை கலாச்சாரத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.