
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு கடந்த 21ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என பலரிடம் விசாரணை நடத்தியும் இதுவரை உறுதியான தடயம் கிடைக்கவில்லை.
சிறுமி பெங்களூருவுக்குக் கடத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உறவினர்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.