
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 21) அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சுமார் ரூ.600 முதல் ரூ.800 கோடி பட்ஜெட்டில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று உலகளவில் 12,000 திரையரங்குகளில் வெளியாகிறது.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.