
மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாகச் சரிந்துவரும் நிலையில், உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதியை வறட்சி மாவட்டங்களாக அறிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யும்படி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.