
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஆஸ்டன் வில்லா அணியுடனான போட்டி 0-0 என சமனில் முடிந்தாலும், ஹல் சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்கு தகுதி பெற்றுள்ள ஹல் சிட்டி அணி, இதுவரை விளையாடிய போட்டிகளில் 270 நிமிடங்கள் வரை கோல் எதையும் விட்டுக்கொடுக்காமல் தடுப்பாட்டத்தில் அசத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் ஆஸ்டன் வில்லா 76% பந்தை தன் வசம் வைத்திருந்தாலும், ஹல் சிட்டி அணி 4 முறை இலக்கை நோக்கி பந்தை உதைத்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.