
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 15 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் 50.33 சராசரியுடன் 151 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி, தற்போது 536 புள்ளிகளுடன் தரவரிசையில் இடம் பெற்றுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதலிடத்தைப் பிடிக்க, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் டி20 தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.