
கடந்த 2007-ம் ஆண்டு சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற பாண்டியமணி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகியிருந்த ஷேக் அப்துல்லாவை தமிழ்நாடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்டதால் அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க பொலிஸார் நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 39 வயதுடைய அவரது தோற்றத்தை இறுதி செய்தனர்.
அந்தப் புகைப்படங்களை வைத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த குற்றவாளி தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.