
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது.
வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் இச்சந்தையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய சந்தையில், நவம்பர் 6 அன்று ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.