
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்கா முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
எதிரி நாடுகளின் தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுப் படைகளைப் பாதுகாக்கும் புவி சுற்றுவட்டப்பாதை விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக விமானப் படைச் செயலாளர் டிராய் மெயின்க் தெரிவித்தார்.
எனினும் அந்த ஆயுதங்களின் விவரங்கள் மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை அவர் விளக்கவில்லை.