
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் நகருக்கு அருகே இன்று காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்த நிலையில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.