
2026 துலீப் டிராபி தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ், ரஞ்சி கோப்பையில் 8 போட்டிகளில் 17.25 சராசரியுடன் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் வைபவ், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தனது பொறுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.