
ஈரப்பதமான இடங்களில் நீண்ட நேரம் நிற்கும்போது ஏற்படும் கால் குடைச்சலுக்கு வைட்டமின் பி12 குறைபாடு அல்லது நரம்பு பாதிப்பு காரணமாக இருக்கலாம் என மருத்துவர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.
ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய 'டாப்ளர்' (Doppler) பரிசோதனை செய்வது அவசியம் என்றும், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, பாதிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது சரியான தீர்வாகும்.