
சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால், சாதாரண பொதுமக்களின் முகங்களை வாடகைக்கு எடுத்து குறும்படங்கள், விளம்பரங்களில் பயன்படுத்தும் புதிய ஆன்லைன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
இதற்கென உருவான செயலிகளில் மக்கள் தங்களின் அடையாள அட்டையைப் பதிவு செய்து புகைப்படங்களை பதிவேற்றி டிஜிட்டல் நடிகர்களாக மாறுகின்றனர்.
ஒரு வங்கி ஊழியரின் முகத்தை ஒரு விளம்பர நிறுவனம் 3 நாட்களில் 7 முறை பயன்படுத்தியதற்காக அவருக்கு சுமார் ரூ.30,000-க்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது.