
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய தேர்வு மையங்களைக் கண்டறிய இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் (AICTE) உதவியை தேர்வு முகமை கோரியுள்ளது.
தனியார் நிறுவனங்களை விட தொழில்நுட்ப கல்லூரிகளின் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதால், கடுமையான அளவுகோல்களின் அடிப்படையில் மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.