
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர்க்கடன் மற்றும் இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்வள அட்டைகள் வழங்க ரூ.6 கோடி, சிறுதானிய சாகுபடி இயக்கம் மற்றும் சூரிய பம்புசெட் மானியம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.