
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்று தொடங்கியது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சுமார் ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்தப் படப்பிடிப்பில் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.