
ரிங்கு சிங் தலைமையிலான மீரட் மேவரிக்ஸ் அணி, லக்னோ ஃபால்கன்ஸ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உத்தரபிரதேச டி20 லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டியில் திவ்யான்ஷ் ஜோஷி 40 பந்துகளில் 105 ரன்கள் குவிக்க, மீரட் அணி 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்து, லக்னோ அணியை 109 ரன்களுக்கு சுருட்டியது.
இந்தத் தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ள ரிங்கு சிங், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கான முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.