
எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் (83) காலமானார்.
தாய்லாந்தின் மூத்த நடிகையான இவர் சுமார் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.