
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அப்புகல் சாலையில் ஹரி பிரசாத் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி மற்றும் சங்கீதா ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த அணைக்கட்டு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.