
ஏழை சிறுமிகளுக்குக் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக வெளியிடப்பட்ட காவல் துறை செல்போன் எண்ணிற்குத் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.