
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் 'சோனி விழா' என்ற பெயரில் புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனலை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
தமிழ் கலாச்சாரம், இசை, உணவு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இதில் ஒளிபரப்பப்பட உள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சேனலின் பெயர் மற்றும் லோகோவை நிறுவனம் நேற்று வெளியிட்டது.