/polimer-news/media/media_files/2026/10/29/vlcsnap-2026-10-29-16h49m25s328-2026-10-29-16-49-39.png)
கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஜாமீன் மனுவிற்குப் பதில் அளிக்கக் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தார்.