
அமேசான் நிறுவனம் தனது சாதனங்கள் (Devices) பிரிவில் பணியாற்றிய சுமார் 250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், நிறுவனத்தின் கட்டமைப்பு ஆய்வு மற்றும் எதிர்காலத் திட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய தொழில்நுட்பத் துறைகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.