
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மனிஷா ராம்டாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
அரையிறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் ஒக்டிலா லெனி ராத்ரி மற்றும் ஹிக்மத் ரமதானி ஜோடியிடம் இந்திய அணி 21-16, 13-21, 17-21 என்ற புள்ளிக்கணக்கில் போராடித் தோல்வியடைந்தது.
மேலும் ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் மற்றும் அபிஜீத் சகுஜா ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.