
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரைப் பகுதியில் மணிக்கு 168 கி.மீ வேகத்தில் கரையை கடந்த 'இசையாஸ்' சூறாவளிப் புயலால் வீடுகளின் மீது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா, அலபாமா உள்பட 4 மாகாணங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்க 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் அவசரகால இருப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.