
போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு பெறுதல் மற்றும் பிறர் பெயரில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
தங்களுக்குத் தெரியாமல் தங்களது ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு பெறப்பட்டுள்ளதா என்பதை அறிய 'சஞ்சார் சாதி' இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிம் கார்டு விநியோகத்தை தடுக்கவும், நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.