பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்க, தேவையற்ற டயர்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணி சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட சுகாதார அலுவலர் மரு. கீதா உத்தரவின்படி, ஓலைப்பாடி, கோவிந்தராஜ பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தூய்மைப் பணி நடைபெற்றது.
மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.