
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப்டம்பர் 3-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.