
முந்தைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, சட்டசபையின் அனுமதி பெறாமல் ரூ.2,000 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 14-ம் தேதியிட்ட அரசாணை மூலம் 80 சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2026-27 பட்ஜெட்டில் சரிசெய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிய நிலையில், இது குறித்து பரிசீலித்து உரிய முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதிலளித்தார்.