
லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங்க் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணியின் ஜோர்டான் காக்ஸ் 100 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் 62 ரன்களுடனும் ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.