
தொடர் தோல்விகளால் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட நிலையில், இயக்குநர் கே.பாக்யராஜ் தனக்கு 'ராசுகுட்டி' படத்தில் வாய்ப்பளித்ததாக நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
தேவர் மகன் படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு கைநழுவிய இக்கட்டான சூழலில், பாக்யராஜ் தனக்கு வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
ராசுகுட்டி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, எஜமான் மற்றும் உள்ளே வெளியே போன்ற முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.