
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்திலிருந்து சுமார் 8 நிமிட பிரத்யேகக் காட்சிகள் தீபாவளியன்று வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இதற்கிடையே இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகாது என்று நடிகர் சிம்பு சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.