
அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் 'அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ்' எனப்படும் கறுப்பு வெல்வெட் திட்டு, சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் பிசிஓஎஸ் போன்ற மருத்துவப் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
2024-ல் வெளியான இந்திய மருத்துவச் சங்கத்தின் ஆய்வின்படி, தென்னிந்தியாவில் இத்தகைய கறுப்பு வெல்வெட் திட்டுகள் பெண்களிடையே 20 சதவீதமும், ஆண்களிடையே 16 சதவீதமும் உள்ளதோடு, 30 முதல் 40 வயதினரிடையே அதிகமாகக் காணப்படுகிறது.
உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு இது திடீரென ஏற்பட்டால், அரிதான இரைப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்களுக்கான அறிகுறியாக இருக்குமோ என்று மருத்துவர்கள் பரிசீலிப்பார்கள்.