
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் டி20 கிரிக்கெட் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார்.
வங்கதேச தரப்பில் நஹிடா அக்தர், ஷொர்னொ அக்தர் மற்றும் ரிடு மொனி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.