
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிட்செல் மார்ஷ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணிகளில் சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் மற்றும் ஆடம் ஜாம்பா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.