
ஆஸ்திரேலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் மில்லியன் டாலர் ஃபிஷ் போட்டியில் 26 வயதான மேத்யூ மோரிஸ் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பரிசை வென்றுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள கொரொபோரி பில்லாபாங் நீர்நிலையில் சிவப்பு நிறக் குறியீடு பொருத்தப்பட்டிருந்த 80 சென்டிமீட்டர் நீளமுள்ள பாரமுண்டி மீனை அவர் பிடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த போட்டியின் 12 ஆண்டுகால வரலாற்றில் இந்த மாபெரும் முதல் பரிசை வெல்லும் இரண்டாவது நபர் மேத்யூ ஆவார்.