
பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், 2027 பிஎஸ்எல் தொடரில் வெளிநாட்டு வீரராக விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.
34 வயதான அமீர், தனது மனைவி நர்ஜிஸ் கான் மூலம் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று தற்போது இங்கிலாந்தில் உள்ளூர் வீரராக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து தான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்.