
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவை தாக்கி வரும் நிலையில், பிரிட்டன் தனது போர் விமானங்களை சவுதிக்கு அனுப்பியுள்ளது.
டைஃபூன் விமானங்கள் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறிக்கும் என்றும், ஏமனுக்குள் நேரடியாக தாக்குதல் நடத்தாது என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக ஹூதிகள் சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.