
உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்களை விட பெண்களுக்கு இது மூன்று மடங்கு அதிகம் ஏற்படுகிறது.
மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி மற்றும் பெரிமெனோபாஸ் கால ஹார்மோன் மாற்றங்கள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் முக்கிய காரணங்களாகும்.
மன அழுத்தம், தூக்கமின்மை, வானிலை மாற்றங்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற காரணிகளும் இந்த நரம்பியல் பாதிப்பை தீவிரப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.