
சொத்து தகராறு மற்றும் தாக்குதல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2022 ஆகஸ்ட் 8-ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், அமைச்சர் வரும் 31-ம் தேதிக்கு பின் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவரது தரப்பு உறுதி அளித்துள்ளது.
அமைச்சர் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெற அனுமதித்து விசாரணையை முடித்து வைத்தார்.