
ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அபய் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டியில் மலேசியாவின் இங் இயான் யோவிடம் போராடி தோல்வியடைந்தாலும், அபய் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இதனைத் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.