
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
சிப் தயாரிப்புக்கான செலவு ஒரே ஆண்டில் 20 டாலரிலிருந்து 60 முதல் 65 டாலராக உயர்ந்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
விலை உயர்வு மற்றும் விற்பனை சரிவு காரணமாக 2027ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனை 91.1 கோடியாகக் குறையக் கூடும்.