
இன்று வெளியான M3M ஹூரன் இந்திய பணக்காரர்கள் 2026 பட்டியலில் செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் டெக்னாலஜி துறைகளைச் சேர்ந்த புதிய கோடீஸ்வரர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த QpiAI நிறுவனத்தின் நிறுவனர் நாகேந்திர நாகராஜா ரூ.1,700 கோடி சொத்து மதிப்புடன் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் இந்தப் பட்டியலிடப்பட்ட முதல் நபரானார்.
ஏஐ துறையைச் சேர்ந்த 19 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், Wispr Flow இணை நிறுவனர்களான தனய் கோத்தாரி மற்றும் சஹாஜ் கார்க் தலா ரூ.4,200 கோடி சொத்து மதிப்புடன் இடம்பெற்றுள்ளனர்.