
ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக 9.99 சதவீத பங்குகளை வாங்குவதற்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-க்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, இந்த பங்குகளை அடுத்த ஓராண்டு காலத்திற்குள் எல்ஐசி நிறுவனம் வாங்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பங்குகளை வாங்கத் தவறினால், இந்த அனுமதி ரத்தாகிவிடும் என்று வங்கி பங்குச்சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.